டெல்லி: வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் அனைத்து சர்வதேச விமான பயணிகளுக்கு விமான நிலையங்களில் தொடர் கொரோனா பரிசோதனை நாளை காலை 10 மணி முதல் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. விமான பயணிகளுக்கு ஆர்டி பிசிஆர் சோதனை நடத்தப்படும் என்றும், அத்தகைய பயணிகள் மாதிரிகளைக் கொடுத்த பிறகு விமான நிலையத்தை விட்டு வெளியேறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நாடு முழுவரதும் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் உள்வரும் அனைத்து சர்வதேச விமான பயணிகளுக்கும் சீரற்ற கோவிட் சோதனை நடத்தப்பட வேண்டும் என விமான போக்குவரத்து அமைச்சகம், விமான நிறுவனங்களுக்கு உத்தரவிட்டு உள்ளது. மேலும், விமான நிலையங்களைத் தயார்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறது மற்றும் 2% பயணிகளை சோதனைக்கு அழைத்துச் செல்ல விமான நிறுவனங்களுக்கு உதவுமாறு பணியாளர்களைக் விமானப் போக்குவரத்து அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
வெளிநாடுகளில் பரவி வெரும் கொரோனா ஒமிக்ரான் மாறுபாடு, இந்தியாவில் பரவுவதை தடுக்க மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தி உள்ளது. தற்போதைய நிலவரப்படி ஒட்டுமொத்த கொரோனா பாதிப்புகளில் 81 சதவீதம் வெறும் 10 நாடுகளில் தான் இருக்கின்றன. அதில் ஜப்பான் முதலிடத்தில் உள்ளது. இதற்கு போதிய அளவில் தடுப்பூசி செலுத்தாதது காரணமாக கூறப்படகிறது.
இந்த நிலையில், இந்தியாவில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது மத்திய அரசு தெரிவித்து உள்ளது. திருவிழாக் காலங்களில் மக்கள் தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. பொது இடங்களில் அதிகம் கூடும் வகையிலான நிகழ்வுகள் நடைபெற்றால், அது கொரோனா பரவலுக்கு வழிவகுக்கும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து, உரிய கட்டுப்பாடுகளை அமல்படுத்துவதும், அவற்றை பின்பற்றுவதும் அவசியம் என கூறியுள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறது.
இதைத்தொடர்ந்து, வரும் டிசம்பர் 27ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் அவசர ஒத்திகைக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. கொரோனா நெருக்கடி காலத்தில் எவ்வாறு தயாராக வேண்டுமோ? எத்தகைய மருத்துவ வசதிகள் இருக்க வேண்டுமோ? செயல்பாடுகளில் எந்த அளவிற்கு வேகம் காட்ட வேண்டுமோ? அவை அனைத்தும் சோதனை முயற்சியில் செய்து பார்க்க போகின்றனர். இதுதொடர்பாக சுற்றறிக்கை அனைத்து மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. . இந்த நாளில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று அவசர ஒத்திகை நிகழ்வை ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார்.
இந்த நிலையில், நாளை முதல் விமான நிலையங்களில் கொரோனா சோதனை மேற்கொள்ள மத்திய விமான அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது. அதன்படி நாளை காலை 10மணி முதல் சர்வதேச விமானங்களில் வரும் பயணிகளுக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட வேண்டும், விமான பயணிகளுக்கு ஆர்டி பிசிஆர் சோதனை நடத்தப்படும் என்றும், அத்தகைய பயணிகள் மாதிரிகளைக் கொடுத்த பிறகு விமான நிலையத்தை விட்டு வெளியேறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதற்கான ஏற்பாடுகளை செய்யும் படி விமான நிறுவனங்களுக்கு மத்திய சிவில் போக்குவரத்து துறை அமைச்சம் உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, 2% பயணிகளுக்கு ரேண்டம் முறையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள இருப்பதாக விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.