உத்திர பிரதேச முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதி குறித்து ஆபாச ஜோக் கூறிய நடிகர் ரன்தீப் ஹுடா ஐநா தூதர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
2012 ஆம் ஆண்டு உத்திர பிரதேச முன்னாள் முதல்வர் மாயவதி குறித்து தொலைக்காட்சி ஒன்றில் ஆபாச ஜோக் கூறியிருந்தார் ரன்தீப் ஹூடா. இந்த வீடியோ சில தினங்கள் முன்பு இணையத்தில் வைரலானது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். சாதிய துவேஷம் ரன்தீப் ஹுடாவின் பேச்சில் இருப்பதாக குற்றஞ்சாட்டினர்.
இந்நிலையில், ஐநா சுற்றுச்சூழல் அமைப்பின் கீழ் இயங்கும் புலம்பெயர் வனவிலங்குகளின் பாதுகாப்பு அமைப்பின் தூதர் பதவியிலிருந்து ரன்தீப் ஹூடா நீக்கப்பட்டுள்ளார். இந்த தூதர் பதவிக் காலம் முடிய இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கும் நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.