ராய்பூரில் நடைபெற்று வரும் ரஞ்சிக்கோப்பை டெஸ்ட் போட்டியில் தமிழகம் – பரோடா அணிகள் மோதிக்கொண்டன. முதலில் டாஸ் வென்ற தமிழக அணி, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. தமிழக அணியின் அசத்தலான பந்துவீச்சில் பரோடா அணி வீரர்கள் அடுத்தடுத்து நடையை கட்டினர். முதல் விக்கெட்டுக்கு 71 ரன்கள் எடுத்த பரோட அணி, அடுத்த 22 ரன்கள் சேர்பதற்குள் 9 விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இறுதியாக 34.3 ஓவர்களிலேயே 93 ரன் எடுத்து ஆல் அவுட் ஆகினர். தமிழக பந்துவீச்சாளர் விக்னேஷ் 5 விக்கெட்டுகளையும் அஸ்வின் கிறிஸ்ட் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.
பின்னர் களம் இறங்கிய தமிழக அணி 31 ஓவரில் ஒரு விக்கட் இழந்து 79 ரன்கள் சேர்த்துள்ளது. அபினவ் முகுந்த் 40 ரன்களும், பாபா இந்திரஜித் 18 ரன்களுடன் களத்தில் உள்ளனர். கவுசிக் காந்தி 11 ரன்களில் ஆட்டமிழந்தார். பரோடா அணி பந்துவீச்சாளர் சாகர் 1 விக்கெட் கைப்பற்றியுள்ளார்.