நடிகர் ராணா ‘சவுத் பே லைவ்’ என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றைத் தொடங்கியுள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெவ்வேறு படங்களில் நடித்து தேசிய அளவில் பிரபலமானார்.
தற்போது ‘சவுத் பே லைவ்’ (South Bay Live) என்று யூடியூப் சேனல் ஒன்றை ராணா தொடங்கியுள்ளார். இதில் ராணாவின் முகம் மட்டும் இருக்க, உடல் கார்ட்டூன் கதாபாத்திரம் போல வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில் பல மொழிகளில் 10 விநாடிகளிலிருந்து 10 மணி நேரங்கள் வரை பல்வேறு காணொலிகள் காணக் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. பிரபலங்கள், இசை, நாட்டு நடப்பு, அனிமேஷன் உள்ளிட்ட தலைப்புகளில் இதன் படைப்புகள் இருக்கும் என்று தெரிகிறது.
இந்த சேனலில் ஒரு மாதத்துக்கு முன்பே, பிரபல தெலுங்கு நடிகர் லக்ஷ்மி மஞ்சு வழங்கும் ‘கமிங் பேக் டு லைஃப்’ என்கிற நேர்காணல் நிகழ்ச்சிக்கான டீஸர் பகிரப்பட்டது. சமீபத்தில் ஒரு இசை நிகழ்ச்சியின் முழு காணொலி பதிவேற்றப்பட்டிருந்தது.