
‘ஜோக்கர்’ படத்தின் மூலம் தமிழ்திரையுலகிற்கு அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். அதன்பின் வாய்ப்பு ஏதும் இல்லாமல் இருந்தார் . இதனிடையில் தன் வீட்டின் மொட்டை மாடியில் எடுத்த போட்டோ ஷூட்டின் மூலம் பிரபலமானார்.
இதனால் சமூகவலைத்தளத்தில் நிறைய ரசிகர்களை சம்பாரித்தாரே தவிர பட வாய்ப்புகள் ஏதும் அவருக்கு கிடைக்கவில்லை .ஆனால், விஜய் தொலைக்காட்சியில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்து கொண்டார். அதில் மேலும் பிரபலமானார்.
தற்போது கரோனா முன்னெச்சரிக்கையால் வீட்டிற்குள்ளேயே இருப்பதால், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது உங்களுடைய அடுத்த படங்கள் என்ற கேள்விக்கும், சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கவுள்ள படத்திலும், சிவிகுமார் தயாரிக்கவுள்ள படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகப் பதிலளித்துள்ளார்.
[youtube-feed feed=1]