மேக்கப் ஏதுமில்லாமல் எடுக்கப்பட்ட நடிகை ரம்யா கிருஷ்ணனின் படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவரது வளைகாப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் தான் அது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி சினிமாக்கள், தொலைக்காட்சி தொடர் மற்றும் நிகழ்ச்சிகள், வெப் சீரிஸ் என ரம்யா கிருஷ்ணன் தொடாத இடமே கிடையாது.

இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகியப் படங்களில் ராஜமாதாவாக நடித்து ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றார். தற்போது அவர் விஜய்யில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார்.