அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய கமலஹாசனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியான நிலையில் சிகிச்சைக்காக கடந்த ஒரு வாரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஒவ்வொரு வாரமும் யார் வெளியே செல்கிறார்கள் என்பதை கடந்த நான்கு எபிசோடுகளாக தொகுத்து வழங்கி வந்த கமலஹாசன் ஐந்தாவது எபிசோட் 60 நாளை எட்டிய நிலையில் கொரோனா பாதிப்பால் தொகுத்து வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கமலுக்கு பதில் ஸ்ருதிஹாசன், விஜய் சேதுபதி, சிம்பு, ரம்யா கிருஷ்ணன் என்று நடிகர் நடிகைகளின் பெயரை பட்டியலிட்ட அவரது ரசிகர்கள் இன்று இரவு 9:30 ஒளிபரப்பாக இருக்கும் நிகழ்ச்சிக்கு மாலை வரை ப்ரோமோ வெளியாகாததால் கொத்தித்துப்போனார்கள்.
இந்நிலையில் ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்க இருக்கும் ப்ரோமோ இப்போது வெளியாகியிருக்கிறது.