2018-ம் ஆண்டு அக்டோபர் 5-ம் தேதி ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘அந்தாதூன்’.

சுமார் 40 கோடி ரூபாயில் உருவான இந்தப் படம் உலக அளவில் சுமார் 450 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்தது.மேலும் தேசிய விருதினையும் வென்றது.

இந்நிலையில் இந்த படத்தின் தமிழ் ரீமேக்கை மோகன் ராஜா இயக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் தியாகராஜன் கைப்பற்றியுள்ளார். இதில் ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடிக்கவுள்ளார்

இதர நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது .

‘அந்தாதூன்’ படத்தில் ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்துக்குப் பிறகு மிக முக்கியமான கதாபாத்திரம் என்றால் அது தபுவின் கதாபாத்திரம்தான். தற்போது அதில் ரம்யா கிருஷ்ணனை நடிக்க வைக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் அவர் ஒப்பந்தம் செய்யப்படுவார் எனத் தெரிகிறது.