ராமேஸ்வரம் மீனவர்கள்: இன்று முதல் வேலைநிறுத்தம்

Must read

 
ராமேஸ்வரம்:
லங்கை சிறையில் உள்ள மீனவர்களை உடனே விடுவிக்க மத்திய , மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்ததில் ஈடுபட்டுள்ளனர்.
fisher
இலங்கை சிறையிலிருக்கும் தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ராமேசுவரம் மீனவர்கள் வெள்ளிக்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்குகின்றனர்.
இலங்கை சிறையிலுள்ள ராமேசுவரம் உள்பட தமிழகத்தைச் சேர்ந்த 77 மீனவர்களையும், 102 படகுகளையும் விடுவிக்கக் கோரியும், சேதமடைந்த தமிழக மீனவர்களின் 18 படகுகளுக்கு நிவாரணம் வழங்கக் கோரியும், இந்திய-இலங்கை மீனவப் பிரதிநிதிகளின் அடுத்தக் கட்ட சுமூகப் பேச்சுவார்த்தை நடத்தக் கோரியும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் மீது மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இந்த காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் மீனவர்கள் ஈடுபடுகின்றனர்.
இன்று முதல் காவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்குவதாக மீனவர் கூட்டமைப்பினர் தெரிவித்து உள்ளனர்.
 

More articles

Latest article