உஜ்ஜைனி: அயோத்தியில் விரைந்து கட்டப்பட்டு வரும் ராமர் கோயில், அடுத்த ஆண்டு டிசம்பரில் திறக்கப்படுமென உஜ்ஜையினி மகாலிங்கேஷ்வரர் கோவில் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நாட்டிலுள்ள 12 ‘ஜோதிர்லிங்கங்களில்’ ஒன்று, ஆன்மீக நகரங்களில் ஒன்றனான உஜ்ஜயினியில் உள்ளது. இந்துக்களின் புனித இடங்களில் ஒன்றாகக் கருதப்படும் ம.பி.யின் உஜ்ஜையினி மகாகாலேஷ்வர் கோயில் உலக பிரசித்தி பெற்றது. ஆண்டு முழுவதும் பக்தர்கள் குவிந்து, சிவனின் அருளை பெற்று வருகின்றனர்.
இந்த கோவிலின் நடைபாதை மேம்பாட்டுத் திட்டத்தின் முதல் கட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று (அக்டோபர் 11, 2022) தொடங்கி வைத்தார். ‘ஸ்ரீ மஹாகால் லோக்’ என்று அழைக்கப்படும் வழித்தடத்தின் முதல் கட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணிப்பதற்கு முன்னதாக, பிரதமர் மோடி உஜ்ஜயினியில் உள்ள மஹாகல் கோவிலில் பூஜை செய்தார். மோடி, பாரம்பரிய வேட்டி உடையணிந்து, மாலை 6 மணியளவில் மகாகாள் கோயில் கருவறைக்குள் நுழைந்தார். அவருடன் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோரும் சென்றனர். இதையடுத்து, உஜ்ஜைன் மாவட்டத்தில் மஹால்கல் லோக் தொடக்கவிழாவில் கலந்துகொண்டு பிரதமர் சிறப்புரை ஆற்றினார். அப்போது,
நாங்கள் ஆன்மிகத்தலங்களின் பெருமைகளை மீட்டெடுக்கிறோம். இந்தியாவின் ஆன்மிக நெறிமுறைகளுக்கு மையமாக விளங்குகிறது உஜ்ஜைன். சிவனின் துணையில் எதுவும் சாதாரணமில்லை. அனைத்தும், அற்புதமானது, மறக்கமுடியாதது, நம்பமுடியாதது. இந்த மஹாகல் லோக்கின் பிரமாண்டம், உலகளவில் நமது கலாசார அடையாளமாக இருக்கும். உஜ்ஜைனின் ஒவ்வொரு மூலையிலும் ஆன்மிகம் பரவியுள்ளது” எனப் பேசினார். மேலும், ராமர் கோயிலின் கட்டுமானச் செலவு மட்டும் தற்போதைய நிலவரப்படி சுமார் 1800 கோடி ரூபாய் ஆகும்.
“அயோத்தியில் ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் விரைந்து நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு டிசம்பரில் திறக்கப்படலாம். காசி விஷ்வநாதர் கோயில் நமது இந்திய கலாசாரத்திற்கு பெருமை சேர்த்து வருகிறது. இதுவரைக் காணாத ஓர் வளர்ச்சி சோம்நாத், கேதார்நாத், பத்ரிநாத் போன்ற சிவதலங்களில் நடைபெற்று வருகிறது என்றார்.