
மயிலாடுதுறை:
புதுக்கோட்டையில் பெரியார் சிலை உடைக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, நாகை மாவட்டம் மயிலாடு துறையில் இன்று முழ கடை அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக அந்த பகுதி பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள புதுக்கோட்டை விடுதி கிராமத்தில் உள்ள பெரியார் சிலை கடந்த 11ந்தேதி இரவு மர்ம நபர்களால் உடைக்கப்பட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பெரியார் சிலை உடைப்புக்கு கண்டனம் தெரிவித்து, கடந்த 20ம் தேதி திராவிடர் விடுதலை கழகம், தமிழர் உரிமை இயக்கம் உள்ளிட்ட அமைப்புக்களை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர்.
அப்போது, ராமரின் உருவப்படம் அவமதிக்கப்பட்டது. இது சர்ச்சையை மேலும் தீவிரப்படத்தியது.
இதையடுத்து, ராமர் படத்திற்கு அவதிப்பு செய்தவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி, இந்து அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பாக இன்று கடையடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அதன்படி இன்று மயிலாடுதுறை பகுதியில் கடையஅடைப்பு நடைபெற்று வருகிறது. நகரில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]