சோடா பாட்டில் பேச்சுக்கு மன்னிப்பு கேட்டிருக்கிறாரே ஜீயர்?

Must read

ரவுண்ட்ஸ்பாய் கேள்வி:  

தனது, சோடா பாட்டில் வீச்சு.. கல்லெறி பேச்சுக்கு வில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜம், ஆண்டாளிடம் மன்னிப்பு கேட்டுள்ளதாக தெரிவித்துள்ளாரே..

ராமண்ணா பதில்:

இதைக் கேட்கும்போது இரு கேள்விகள் நமக்குத் தோன்றுகின்றன.

1. ஆண்டாளிடம் மன்னிப்பு கேட்டிருப்பதாகத்தான் சொல்கிறார் ஜீயர். சோடா பாட்டில் மற்றும் கல்வீச்சு தெரியும் என்ற வார்த்தைகளை இவர் ஆண்டாளை நோக்கியா வீசினார்? ஆண்டாளை விமர்சித்ததா இவர்கள் விமர்சனம் செய்த வைரமுத்து மற்றும் இதரர்கள் மீதுதானே! ஆக இவர்களிடம்தானே மன்னிப்பு கேட்க வேண்டும்?

2. “ஜீயர் சோடா பாட்டில் வீசுவதாக நல்ல அர்த்தத்தில் கூறியிருப்பார். அதைத் தவறாக நினைக்க வேண்டாம். ஆன்மீகப் பெரியார்கள் அப்படியெல்லாம் பேசமாட்டார்கள், அவர்களுக்கு பாட்டிலெல்லாம் வீசத்தெரியாது” என்று ஜீயருக்கு வக்காலத்து வாங்கினாரே மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.. அவர் இப்போது என்ன சொல்கிறார்?

 

 

More articles

Latest article