டெல்லி: தமிழகத்தில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
தமிழகத்தில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு திட்டங்களுக்கு டெல்லியில் இருந்தவாறு அவர் காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார். ராமநாதபுரம் – தூத்துக்குடி இடையே ரூ.700 கோடி மதிப்பில் அமையவுள்ள இயற்கை எரிவாயு குழாய் இணைப்புத் திட்டத்தை தொடக்கி வைத்தார்.
ராமநாதபுரத்திலிருந்து தூத்துக்குடி வரை 143 கிலோ மீட்டர் தொலைவுக்கு இயற்கை எரிவாயு குழாய் அமைக்கப்படவுள்ளது. நாகப்பட்டினத்தில் ரூ.31,500 கோடி மதிப்பில் அமைய இருக்கும் காவிரிப் படுகை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.
சென்னை மணலி பெட்ரோலியம் நிறுவனத்தில் ரூ.500 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்ட கேசோலின் சல்பர் நீக்கப் பிரிவு திட்டத்தையும் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.