மதுரை:

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம்  தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஏப்ரல் 18ந்தேதி தமிழகத்தில் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில்,  ராமநாதபுரம் தொகுதியில் இந்திய முஸ்லிம் லீக் வேட்பாளராக நவாஸ் கனி போட்டியிடுகிறார் என்று அக்கட்சி  அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

ஆனால், திமுக தலைமை கூட்டணி தொகுதிகள் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் முன்பே, இந்திய யூனியன் முஸ்லிம் கட்சி வேட்பாளர் நவாஸ் கனி அன்று மசூதிகள் மூலம் அறிவிக்கப்பட்டு, அறிமுகக்கூட்டங்கள் நடைபெற்று வந்தது. இது கூட்டணி கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், இன்று தொகுதிகள் ஒதுக்கீடு குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்ததும், முஸ்லிம் கட்சியும் தங்களது வேட்பாளர் பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

நாவஸ்கனி, நாடு முழுவதும் செயல்பட்டு வரும் பிரபலமான  எஸ்.டி. கொரியர் நிறுவனத்தின் உரிமையாளர்.

இவர்தான் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி கட்சியான முஸ்லிம் லீக் கட்சி சார்பில் களமிறக்கப்பட்டு உள்ளது. அவருக்கு ஆதரவாக ஏற்கனவே பேனர்கள், போஸ்டர்கள், சமூக வலைதளங்களில் விளம்பரம்  என ராமநாதபுரம் தொகுதிகளில் களைகட்டி வருகிறது.

கடந்த திங்கட்கிழமை மாலை, சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில்,   ராமநாதபுரம் தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் கா. நவாஸ்கனியின் அறிமுகக் கூட்டமும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.