ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே செயல்பட்டு வரும் கிறிஸ்தவ சர்ச்சுக்கு வந்த மூன்று சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த சர்ச்சின் பங்குத்தந்தை ஜான் ராபர்ட் கைது செய்யப்பப்டடு உள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாடு முழுவதும் பாலியல் தொல்லைகள், வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால், இந்து சாமியார்கள் நடத்தும் பாலியல் தொல்லைகள் மட்டுமே வெளிச்சத்துக்கு வரும் நிலையில் மற்ற மதத்தில் நடைபெறும் பாலியல் தொல்லை, மதபோதகரின் பாலியல் வன்புணர்வு குறித்த தகவல்கள் வெளியாகாது. ஏற்கனவே நாட்டிலேயே அதிகமான பாலியல் வன்முறைகள், கேரள மாநிலத்தில் நடைபெறுவதாக ஆய்வுகள் தெரிவித்து வருகின்றன. அதுவும், சர்ச்சுகளில் நடைபெறும் பாலியல் பலாத்காரங்கள் குறித்து அதிர்ச்சியூட்டும் அறிக்கை கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது.
தமிழ்நாட்டிலும், மதபோதகர்கள் தமிழகத்தில் அடிக்கடி அத்துமீறும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. குறிப்பாக சிறுமிகளிடம் மதபோதகர்கள் தவறு செய்வது அதிகரிக்கிறது. தேவாலயங்களில் பாலியல் வன்முறைகள், வன்புணர்வுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஜனவரி மாதம், நீலகிரி மாவட்டம், ஊட்டியை சேர்ந்தவர் சூரி ஸ்டீபன் என்ற மதபோதகர் தனது சர்ச்சுக்கு வந்த 13 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவருக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, மதபோதகர் சூரி ஸ்டீபனை ‘போக்சோ’ சட்டத்தில் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில், ராமநதாதபுரம் மாவட்டத்தில், தேவாலயத்தின் பங்குதந்தை, சர்ச்சுக்கு வந்த சிறுமியிடம் பாலியல் தொல்லை செய்த புகாரின்பேரில் கைது செய்யப்பட்டு உள்ளார். ராமநாதபுரத்தில் உள்ள புனித அருளானந்தர் தேவாலயத்தில் காளையார்கோவில் பகுதியை சேர்ந்த 46 வயது ஜான் ராபர்ட் என்பவர் பங்கு தந்தையாக (ஃபாதர்) இருந்து மதபோதனை செய்து வருகிறார். இவர் அங்கு பிரார்த்தனைகளுக்கு வரும் 3சிறுமிகளிடம் அத்துமீறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இந்த திருப்பலியில் மண்டபம் பகுதியைச் சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர். பிரார்த்தனை நிறைவடைந்து, அனைவரும் தேவாலயத்தைவிட்டு புறப்பட்ட நிலையில், மண்டபம் பகுதியிலிருந்து பிரார்த்தனைக்கு வந்திருந்த மூன்று சிறுமிகளை மட்டும் பங்குத்தந்தை ஜான்ராபர்ட் தனியாக அழைத்துச் சென்றதாகச் சொல்லப்படுகிறது. அங்கு அவர் சிறுமிகளிடம், பாலியல் உணர்வுகளைத் தூண்டும்விதமான ஆபாசவார்த்தைகளால் பேசிக்கொண்டே சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பான புகாரின்பேரில், குழந்தைகள் நல ஒருங்கிணைப்பாளர் சிறுமிகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். அதைத்தொடர்ந்து , பங்குத்தந்தை ஜான் ராபர்ட் சிறுமிகளுக்கு ஆபாச படங்களை காண்பித்து பாலியல் உணர்ச்சிகளை தூண்டும் விதமாக பேசி இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து பாதிரியார் ஜான் ராபர்ட் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.