தமிழக தலைமைச் செயலாளர் ராமமோகன்ராவ் வீட்டில் வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அண்ணாநகரில் உள்ள ராமமோகன்ராவ் வீட்டில் இன்று அதிகாலை 5.15 முதல் முதல் சோதனை நடைபெற்று வருகிறது. மொத்தம் ஏழு இடங்களில் இச் சோதனை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
IT Raids in the residence of Chief Secretary of Tamil Nadu , Rama Mohana Rao. IT raids are also conducted in places of persons related to him.