சென்னை

அன்புமணி அப்பட்டமாக பொய் சொவ்வதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அன்புமணி ராமதாசுக்கு இடையே கருத்து கடந்த சில வாரங்களாக மோதல் நடந்து வருகிறது. இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் சேலத்தில் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.

இன்று பாமக நிறுவனர் ராமதாஸ்  சென்னை வந்துள்ளார் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாமக எம்.எல்.ஏ.க்களின் உடல்நிலை குறித்தும் ராமதாஸ் கேட்டறிந்தார்.

பிறகு ராமதாஸ் செய்தியாளர்களிடம்

பாமகவில் ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கு திமுக காரணம் என அன்புமணி கூறியது அப்பட்டமான பொய். கடைந்தெடுத்த பொய் அன்புமணி மாவட்டந்தோறும் பொதுக்குழு கூட்டம் நடத்துகிறாரே? என்று கேட்கிறீர்கள்.அவரவர்  வேலையை அவரவர் செய்கின்றனர்”

என்று கூரியுள்ளார்..

அப்போது செய்தியாளர்கள் மேடையில் மன்னிப்பு கேட்ட அன்புமணி நேரில் கேட்க வேண்டும் என நினைக்கிறீர்களா? என்று கேட்டதற்கு பதிலளித்த ராமதாஸ், போகப்போகத் தெரியும் என்று பாட்டு பாடினார்