தாடியை டிரிம் செய்து உதவிய மத்திய அமைச்சரின் மகன’..
ஊரடங்கால் சலூன் கடைகள் மூடப்பட்டுள்ளதால், எல்லா தரப்பினரும் தாடி வளர்க்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி விட்டனர்.
தங்கள் ’டிரேட் மார்க்’ ஆன தாடியை ‘டிரிம்’ செய்ய முடியாமல் வி.ஐ.பி.க்கள் தடுமாறி நிற்கிறார்கள் .
அவர்களில் ஒருவர்-
மத்திய உணவு அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான்.
அவரது அடையாளமே, கருந்தாடி தான்.
சலூன் கடை மூடப்பட்டுள்ளதால், கன்னா பின்னா வென தாடி வளர்ந்து பஸ்வானின் முகம் பொலிவிழந்து விட்டது.
இதனை கவனித்த அவரது மகனும், மக்களவை உறுப்பினருமான ஸ்ரீராக் பஸ்வான், தானும் முகம் வாடிப்போனார்.
டெல்லியில் உள்ள தங்கள் வீட்டில் ரொம்ப நாட்களாக பயன் படுத்தப்படாமல் இருந்த ‘டிரிம்’மர் உதவியால்- தந்தையின் தாடியை ‘டிரிம்’ செய்துள்ளார்.
ராம்விலாஸ் பஸ்வானுக்கு ஒரே.கொண்டாட்டம்.
தந்தையின் தாடியை ‘டிரிம்’ செய்யும் வீடியோவை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள சிராக்’’ எனக்குள் இப்படி ஒரு திறமை இருக்கும் என்று நான் ஒரு போதும் நினைத்ததில்லை’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
‘லாக்டவுன்’’முடிந்த பிறகும் சிராக், தன் கைவரிசையைத் தொடர்ந்தால் தனக்கு ஆபத்தாச்சே?’’ எனக் கவலையில் ஆழ்ந்துள்ளார் ,ராம்விலாஸ் பஸ்வானின், ஆஸ்தான சலூன் கடைக்காரர்.