ராம் ரகீம் சாமியாரின் வளர்ப்பு மகளுக்கு ஜாமீன்

Must read

ஞ்சகுலா

பலாத்கார வழக்கில் 20 வருடம் சிறைத் தண்டனை  பெற்றுள்ள ராம்ரகீம் சாமியாரின் வளர்ப்பு மகளுக்கு கலவரத்தைத் தூண்டிய வழக்கில் ஜாமீன் வழங்கபட்டுள்ளது.

தேரா சச்சா அமைப்பைச் சேர்ந்த சாமியார் ராம் ரகீம் மீது அவர் ஆசிரமத்தில் வசிக்கும் பெண்களைப் பலாத்காரம் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.   இந்த வழக்கில் கடந்த 2017 ஆம் வருடம் அவருக்கு 20 வருடச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.   அதையொட்டி பஞ்சாப் மற்றும் சண்டிகர் மாநிலத்தில் கடும் கலவரம் நிகழ்ந்தது.   பல பொதுச் சொத்துக்கள் சேதம் ஆனது.

இதையொட்டி நடந்த வழக்கு விசாரணையில் ராம்ரகீம் சாமியாரின் வளர்ப்பு மகள் ஹனிபிரீத் மற்றும் சிலர் இணைந்து இந்த கலவரங்களைத் தூண்டியதாகத் தெரிய வந்தது.  அதையொட்டி ஹனிபிரீத் மற்றும் சிர்சாவில் அமைந்துள்ள ராம்ரகீம ஆசிரம நிர்வாகக் குழுவைச் சேர்ந்த 45 பேர் மீது வழக்கு பதியப்பட்டது.

தற்போது இவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  இந்நிலையில் ஹனிபிரீத் மற்றும் உள்ளவர்கள் மீதான குற்றச்சாட்டை செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி சஞ்சய் சந்திர் ரத்து செய்தார்.  ஏற்கனவே இது குறித்து விசாரித்து வரும் பஞ்ச்குலா நீதிமன்றம் இந்த வழக்கையும் சேர்ந்து விசாரிக்கும் என அவர் தீர்ப்பளித்தார்.

எனவே இந்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என ஹனிபிரீத் கோரிக்கை விடுத்தார். அதை விசாரித்த பஞ்சகுலா நீதிமன்ற தலைமை நீதிபதி  ஹனிபிரீத்துக்கு ரூ.1 லட்சம் ரூபாய் ரொக்க ஜாமீனில் விடுதலை செய்ய அனுமதி அளித்தார்.

More articles

Latest article