அன்பு, கருணை நீதி போன்ற சிறந்த மனித குணங்களின் வெளிப்பாடாகும் ராமர்… ராகுல்காந்தி டிவிட்

Must read

டெல்லி:

ன்பு, கருணை நீதி போன்ற சிறந்த மனித குணங்களின் வெளிப்பாடாகும் ராமர் என்று முன்னாள் காங்கிரஸ் கட்சித் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல்காந்தி டிவிட் பதிவிட்டு உள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சியாக இன்று பிரம்மாண்ட மான ராமர் கோயில் கட்டுவதற்கான பூமிபூஜை, அடிக்கல் நாட்டும் விழா இன்று நடைபெற்றது.

இதில் பிரதமர் மோடி உள்பட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். அதைத்தொடர்ந்து வேத பண்டிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க,  கோயில் கட்டுமானத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்த நிலையில், ராமர் கோவில் நிகழ்வு குறித்து, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டிவிட் பதிவிட்டுள்ளார்.

அதில், மரியாதைக்குரிய புருஷோத்தமரான கடவுள் ராமர் மனித மாண்புக்கு மிகப் பெரிய உதாரணமாக திகழ்பவர். ராமரின் மனிதத் தன்மை நம் அனைவரது இதயத்திலும் எப்போதும் இருக்கும்.

ராமர் என்றால் அன்பு; அவரை ஒருபோதும் யாராலும் வெறுக்க முடியாது. ராமர் என்றால் கருணை; அவர்கள் ஒருபோதும் கொடூரமாக தோன்ற முடியாது, ராமர் என்றால் நீதி; அவர்கள் ஒருபோதும் அநீதியில் தோன்ற முடியாது.

இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

More articles

Latest article