தெலுங்கு சினிமாவில் பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா, தற்போது கொரோனா வைரஸ் பற்றி ஒரு முழு திரைப்படத்தையே இயக்கி உள்ளார். அதையும் அவர் கொரோனா லாக்டவுனில் முழுமையாக எடுத்து முடித்துள்ளார்.
கொரோனா வைரஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் ட்ரைலரை தற்போது அவர் வெளியிட்டுள்ளார்.

“கொரோனா வைரஸ் ஹாரர் படம் இல்லை. அது நம் மனதுக்கு உள்ளே இருக்கும் பயத்தை பற்றியது.என ராம் கோபால் வர்மா தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.


படத்தின் ட்ரெய்லரை பார்த்துவிட்டு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ட்விட்டரில் பாராட்டி பேசியுள்ளார்.
“இந்த ராம் கோபால் வர்மாவை அடக்க முடியாது. பலருக்கு ‘ராமு’.. ஆனால் எனக்கு ‘சர்க்கார்”.. அவர் லாக் டவுனில் இருக்கும் ஒரு குடும்பத்தை பற்றி ஒரு முழு படத்தையும் எடுத்துள்ளார். இதுதான் ட்ரைலர்” என குறிப்பிட்டு அந்த படத்தின் ட்ரைலரை பகிர்ந்துள்ளார்.


அதற்கு நன்றி கூறியுள்ள ராம் கோபால் வர்மா.

[youtube-feed feed=1]