போதைப்பொருள் விவகாரத்தில் சிக்கி, மும்பையில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர், நடிகை ரகுல் ப்ரித் சிங்.

ஓ.டி.டி. தளம் ஒன்றில் நடிகை சமந்தா தொகுத்து வழங்கும் “சம்ஜம்” என்ற நிகழ்ச்சியில் ரகுல் அண்மையில் பங்கேற்றார்.

விரைவில் ஒளிபரப்பாகவிருக்கும் இந்த நிகழ்ச்சியின் முன்னோட்ட காட்சிகள் வெளியாகி உள்ளது.

பல்வேறு கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக பதில் அளித்துள்ள ரகுல் ப்ரித் சிங், தான் வீடு வாங்கியது தொடர்பான கேள்வியின் போது உணர்ச்சி வசப்பட்டார்.

“அந்த வீட்டை எனக்கு வேறு யாரோ வாங்கி தந்ததாக தொடர்ந்து வதந்தி பரவி வருகிறது. நான் தான் அந்த வீட்டை வாங்கினேன். மற்றவர்கள் என்னை பராமரிக்கும் நிலையில் நான் இல்லை. வேறு யாரோ வீடு வாங்கி தந்திருந்தால் நான் ஏன் ஓடியாடி உழைக்க வேண்டும் ?” என ரகுல் ப்ரித் சிங் பொங்கி எழுந்து விட்டார்.

– பா. பாரதி