டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், நாளை (பிப்.13) மாநிலங்களவை அமர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாநிலங்களவை செயலகம் அறிவித்து உள்ளது.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடா் ஜனவரி 29-ஆம் தேதி அன்று குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. அன்றைய தினமே பொருளாதார ஆய்வறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து ர் பிப்ரவரி 1ந்தேதி தொடங்கியது. அன்றைய தினம் நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், ‘2021-22ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை வாசித்தார். தொடர்ந்து, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, மாநிலங்களவை முற்பகலிலும், மக்களவை பிற்பகலிலும், நடைபெற்று வந்தது. தற்போது, குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நாடாளுமன்ற அவைகளில் விவாதம் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், நாளை மாநிலங்களவை அமர்வு ரத்து செய்யப்படுவதாகஅறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், இந்த பட்ஜெட் கூட்டுத்தொடரின் முதல் அமர்வு பிப்ரவரி 15ஆம் தேதி வரை திட்டமிடப்பட்டிருப்பினும், அவை வரும் பிப்ரவரி 13ஆம் தேதியுடன் முடிவடைவதாக இருந்தது. இந்நிலையில், நாளை (பிப். 13) மாநிலங்களவையின் அமர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே, மாநிலங்களவையில் நாளை அமர்வு இருக்காது என தெரிவித்துள்ளது.
இரு கட்டங்களாக நடைபெறும், பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது கட்டத் தொடர் மாா்ச் 8-ம் தேதி முதல் ஏப்ரல் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது. முன்னதாக உறுப்பினர்கள் அனைவரும் கொரோனா சோதனை நடத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.