சென்னை: ராஜ்யசபா தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்ற நிலையில், அதிமுக, பாமக தரப்பு வேட்பாளர்கள் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்கின்றனர்.

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 6 ராஜ்யசபா இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஏற்கனவே தொடங்கி உள்ள நிலையில், இன்றுடன் வேட்பமனு தாக்கல் முடிகிறது. இந்த தேர்தலில், திமுக அணிக்கு 4 இடங்களும், அதிமுக அணிக்கு 2 இடங்களும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இதையடுத்து, திமுக தரப்பில் ஏற்கனவே வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். அதன்படி, திமுகவில் இரண்டு பேரும், தேமுதிக, காங்கிரஸ் தரப்பில் தலா ஒருவரும் போட்டியிடுகின்றனர்.
அதிமுக கூட்டடணியில் அதிமுக தரப்பில் ஒருவரும், கூட்டணி கட்சியான பாமகவுக்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டது.
அதன்படி, அதிமுக சார்பில் ஏற்கனவே மாநிலங்களவை எம்.பி. இருந்து வரும் மு.தம்பிதுரைக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், பா.ம.க தலைவர் அன்புமணி மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து, இன்று அதிமுக தம்பித்துரை, பாமக அன்புமணி ஆகயோர் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்.