டெல்லி: மணிப்பூர் விவகாரத்தை கையில் எடுத்துள்ள எதிர்க்கட்சிகள்  இன்று நாடாளுமன்றத்தை முடக்கி உள்ளன. இதனால்,  மக்களவை மற்றும் மாநிலங்களவை பிற்பகல்  வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜுலை 20ந்தேதி  தொடங்கி நடைபெற்று வருகிறது.  இந்த கூட்டத் தொடங்கிய நாள் முதல்  மணிப்பூர் விவகாரத்தை கையில் எடுத்துள்ள எதிர்க்கட்சிகள்,  மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானமும் கொடுத்துள்ளன. இதுகுறித்து விவாதிக்கப்படும் என நாடாளுமன்ற தலைவர் ஓம்.பிர்லா தெரிவித்துள்ளார். ஆனால், அதை பொருட்படுத்தாக எதிர்க்கட்சிகள்   இனறு காலை 11 மணி அளவில் தொடங்கிய நிலையில்,   மணிப்பூர் விவகாரத்தை கையில் எடுத்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் மக்களவை மற்றும் மாநிலங்களவை  பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

முன்னதாக, ராஜஸ்தானில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து ராஜ்யசபாவில் 176 விதியின் கீழ் விவாதிக்க வேண்டும் என்று அவைத் தலைவரும், மத்திய அமைச்சருமான  பியூஷ் கோயல் கோரினார். ராஜஸ்தான் விவகாரம் குறித்து விவாதிக்க கோரி கருவூல பெஞ்ச் எம்.பி.க்கள் கோஷம் எழுப்பினர்.