டெல்லி
மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி அளிப்பது தமக்கு பொறுப்பு எனத் தெரிவித்துள்ளார்.

நேற்று டெல்லி யில் நடந்த ஒரு நிகழ்வில் உரையாற்றிய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்,’
“பிரதமர் மோடியையும், அவரது பணி ஸ்டைலும் மக்களுக்கு நன்கு தெரியும். அவரது உறுதிப்பாடும், வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொண்ட விதத்தையும் மக்கள் அறிவர்.
எனவே பிரதமர் மோடி தலைமையின் கீழ் நீங்கள் என்ன விரும்புகிறீர்களோ அது நிச்சயம் நடக்கும் என்பதை உறுதிபட தெரிவித்துக்கொள்கிறேன்..
எனது வீரர்களுடன் இணைந்து உழைப்பதும், நாட்டின் எல்லைகளை பாதுகாப்பதும் ஒரு ராணுவ அமைசராக எனது பொறுப்பு,
அப்படி ஆயுதப்படைகளுடன் இணைந்து பணியாற்றுவதும், நாட்டுக்கு தீங்கு விளைவிப்பவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்பதும் எனது பொறுப்பு”
என்று தெரிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]