டில்லி

த்தரகாண்ட் மாநிலத்தில் சீன எல்லையோரம் கடல் மட்டத்தில் இருந்து 17000 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட சாலையை அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்துள்ளார்

இந்தியாவில் இருந்து யாத்திரிகர்கள் பெருமளவில் திபெத் பகுதியில் உள்ள கைலாஷ் மானசரோவர் தலத்துக்கு யாத்திரை செல்வது வழக்கமாகும்.   மனச்ரோவ்ர் என்பது லிபு லேக்கில் இருந்து சுமார் 90 கிமீ தூரத்தில் உள்ளது.   இது மலைப்பாதை பகுதியாகும்.

 கைலாஷ் மானசரோவர் செல்ல யாத்திரிகர்களுக்கு மலைப்பாதையில் குறைந்தது 3 வாரங்கள் பயணம் செய்ய வேண்டி இருந்தது.  இதையொட்டி லிபுலேக் வரை ஒரு புதிய சாலை அமைக்கப்பட்டது.  இந்த சாலை கடல் மட்டத்தில் இருந்து சுமார் 17000 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ச்மீபத்தி இந்த சாலையை வீடியோ கான்பரன்சிங்  மூலம் திறந்து வைத்துள்ளார்.  இந்த புதிய சாலையை பயன்படுத்துவதால் யாத்திரிகர்கள் கைலாஷ் மானசரோவருக்கு ஒரே வாரத்தில் செல்ல முடியும்.