டில்லி:
இன்று முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 27-வது நினைவு தினம் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
நினைவுதினத்தை யொட்டி, ராஜீவ்காந்தியின் மகனும், தற்போதைய அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ராகுல்காந்தி, தனது தந்தை குறித்து உருக்கமாக டுவிட் செய்துள்ளார்.
ராகுல்காந்தி பதிவு செய்துள்ள டுவிட்டர் பதிவில், இன்று தனது தந்தையின் இறந்த நாள் , வெறுப்பு, அதை சுமந்து கொண்டிருப்பவர்களுக்கு ஒரு சிறை என்று என் தந்தை எனக்கு கற்பித்தார். அனைவரின் மீதும் அன்பு கொள்ள வேண்டும், அனைவரின் உணர்வையும் மதிக்க வேண்டும் என எனது தந்தை கற்று கொடுத்ததற்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன். இதனை அவரது நினைவு நாளில் அதனை நான் நினைவுகூர்கிறேன்.
உங்களை (ராஜீவ் காந்தி) விரும்பும் அனைவரும் உங்களை எப்போதும் இதயத்திலேயே வைத்திருப்போம் எனவும் அவர் கருத்து பதிவிட்டுள்ளார்.
ராகுல்காந்தியின் டுவிட்டர் பதிவு, அதை காணும் ஒவ்வொருவரின் மனதையும் வேதனைக்கொள்ளச் செய்கிறது.
இந்நிலையில், இன்று காலை ராஜீவ்காந்தியின் நினைவிடமான வீர்பூமியில், சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா உள்பட காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.