சென்னை: ராஜீவ் காந்தியின் 33வது நினைவு நாளையொட்டி,  தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஊர்வலமாக சென்று பூந்தமல்லி நினைவிடத்தில்  மாநில தலைவர் செல்வபெருந்தகை தலைமையில்  மரியாதை செய்யப்பட்டது.

டெல்லி: முன்னாள் பிரதமர் மறைந்த ராஜீவ் காந்தியின் 33வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. ராஜீவ்காந்தியின் , அவரது  நினைவு தினமான மே 21- ந்தேதி பயங்கரவாத எதிர்ப்பு தினமாக கடைபிடித்து வருகிறது.  ராஜீவ் நினைவுதினத்தையொட்டி, டெல்லி வீர் பூமியில் உள்ள அவரது  நினைவிடத்தில்  காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள் சோனியா, ராகுல், கார்கே  உள்பட தலைவர்கள் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து நாடு முழுவதும் அவரது உருவபடம் வைத்து காங்கிரஸ் தொண்டர்கள் மரியாதை செய்து வருகின்றனர்.

இநத் நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில், இன்று காலை காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் பாரத ரத்னா ராஜீவ்காந்தி அவர்களின் நினைவுதினமான இன்று (21.05.2024) அலங்கரிக்கப்பட்ட அவரது திருவுருவ படத்திற்கு மாநில தலைவர் செல்வபெருந்தகை தலைமையில்,  மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. அதன்பின், பயங்கரவாத எதிர்ப்பு தின உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதைத்தொடர்ந்து, சின்னமலையில் உள்ள ராஜீவ்காந்தி அவர்களின் சிலைக்கு  மாநில தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. பின்பு பயங்கரவாத எதிர்ப்பு தின உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.

தொடர்ந்து,  பூந்தமல்லியில் அமைந்துள்ள ராஜீவ்காந்தியின் நினைவு சின்னம் அருகே மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை எம்எல்ஏ தலைமையில், காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன்   பயங்கரவாத எதிர்ப்பு தின ஊர்வலமாக சென்று அலங்கரிக்கப்பட்ட அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. அதன்பின்  பயங்கரவாத எதிர்ப்பு தின உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.