சாதனை தமிழன் மாரியப்பனுக்கு ராஜீவ்காந்தி – வாழப்பாடி கே ராமமூர்த்தி அறக்கட்டளை ஒரு லட்ச ரூபாய் பரிசு

Must read

சென்னை:
பிரேசில் தலைநகர் ரியோவில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டும் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ள, தமிழக இளைஞர் த. மாரியப்பனுக்கு மத்திய மாநில அரசுகளும் பல்வேறு அமைப்புகளும் பரிசுகள் அறிவித்து வருகின்றன.
இந்த நிலையில், “ராஜீவ்காந்தி – வாழப்பாடி கே ராமமூர்த்தி அறக்கட்டளை”, சாதனைத் தமிழன் மாரியப்பனுக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு அளிப்பதாக அறிவித்துள்ளது.
5-a
இந்த அறிவிப்பை அறக்கட்டளையின் அறங்காவலர் வாழப்பாடி ராம சுகந்தன் தெரிவித்துள்ளார்.
“நமது அறக்கட்டளை பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. இந்த நிலையில் பாரா ஒலிம்பிக்கில் சாதனை படைத்து இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் பெருமை சேர்த்துள்ள மாரியப்பன் என்கிற அந்த சாதனை இளைஞருக்கு ஒரு லட்சம் பரிசு அளிப்பதில் நாமும் பெருமிதம் கொள்கிறோம்” என்று வாழப்பாடி ராம சுகந்தன் தெரிவித்தார்.

More articles

Latest article