லக்னோ,

உ.பி.யில் மர்ம நபரால் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி சிலை உடைக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்த உ.பி. முதல்வர்  யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளது.

உ.பி. மாநிலம்மி ர்சாபூரில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் சிலை மர்ம நபர்களால் உடைக்கப்பட்டது. இநத் சிலை மிர்சாபூரில் உள்ள ஆவாஸ் விகாஸ் காலனி பூங்காவில் ஏற்கனவே நிறுவப்பட்டது.  இந்த சிலையை கடந்த சனிக்கிழமை சில அடையாளம் தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து  உத்திரப்பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் (UPCC) உறுப்பினர்கள் மாநிலம் முழுவதும்  ஆர்ப்பாட்டங்களை நடத்தினர், பல இடங்களில் ரயில்களை நிறுத்தியதுடன், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உருவ பொம்மையையும் எரித்தனர்.

இதுகுறித்து மிர்சாபூர் தொகுதி ராஜ்யசபா உறுப்பினராக ராஜ்பப்பர் சம்பவ இடத்தை பார்வையிட்டு,  24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என்றும் இல்லையேல் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்று எச்சரித்தார்.

மேலும்,  ராஜீவ் சிலை உடைக்கப்பட்டது, மக்களுக்காக  தனது வாழ்க்கையை அமைத்த மதச்சார்பற்ற, முற்போக்கான மற்றும் முழுமையான கருத்துக்களை கொண்ட முன்னாள் பிரதமரை அவமதிக்கும் முயற்சியாகும்,” என தெரிவித்தார்.

சிலை உடைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து  லக்னோவில் பாட்ஷாஹ்நகர் ரெயில் நிலையத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் ரெயிலை நிறுத்த முயற்சித்தனர். அவர்களை காவலர்கள் விரட்டியடித்தனர்.

இதுகுறித்து மிர்சாபூர் பொலிஸார் சூப்பிரண்டு கூறியதாவது,

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி சிலை சில அடையாளம் தெரியா நபர்களால் உடைக்கப்பட்டுள்ளதாக எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து, மாநில துணைமுதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா கூறியதாவது,

ராஜீவ்காந்தி சிலை உடைக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும், குற்றவாளிகள் விரைவில் பிடிக்கப்படுவார்கள் என்றும், இந்த சிலை உடைப்புக்கு பின்னணியில் உள்ளவர்கள் குறித்தும் தீவிரமாக விசாரணை செய்யப்படும் என்றும் கூறி உள்ளார்.