கமதாபாத்

ரு தலித் அமைப்பால் அளித்து விஜய் ரூபானி பெற்றுக் கொள்ள மறுத்த தேசியக் கொடியை ராகுல் காந்திக்கு வழங்கப்பட உள்ளது.

குஜராத்தில் உள்ள தலித் அமைப்புக்களில் ஒன்று தலித் சக்தி கேந்திரா.  இந்த அமைப்பு இந்தியாவிலேயே பெரிய அளவிலான தேசியக் கொடி ஒன்றை அமைத்தது.  சுமார் 125 அடி அகலமும் 83.3 அடி உயரமும் கொண்ட இந்தக் கொடியை குஜராத் முதல்வர் விஜய் ரூபானிக்கு அளித்து அவரிடம் பாபா சாகேப் அம்பத்கார் அறிவித்த தீண்டாமைக் கொள்கைக்கான நடைமுறைகளை ஏற்படுத்த வேண்டுகோள் விட திட்டமிடப்பட்டிருந்தது.

முதல்வரின் சார்பாக காந்திநகர் கலெக்டர் அலுவலகம் அந்த கொடியை வைப்பதற்கு அலுவலகத்தில் இடமில்லை எனச் சொல்லி மறுத்து விட்டது.  இந்நிலையில் வரும் 24ஆம் தேதி அன்று இந்த அமைப்பின் ஒரு விழாவில் கலந்துக் கொள்ள காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி ஒப்புக் கொண்டுள்ளார்.

இந்த அமைப்பின் தலைவர், “எங்கள் நிகழ்ச்சியில் ராகுல் காந்தி கலந்துக் கொள்வதற்கு மகிழ்ச்சியை தெரிவிக்கிறோம்.  முன்பு இடமில்லை எனக் கூறி விஜய் ரூபானி பெற்றுக் கொள்ள மறுத்த தேசியக் கொடியை ராகுல் காந்தி பெற்றுக் கொள்ள சம்மதித்துள்ளார். அத்துடன் அம்பேத்கார் அறிவித்தபடி தீண்டாமை கொள்கைகளை நடைமுறைப்படுத்த தேவையான ஏற்பாடுகள் செய்யவும் ஒப்புக் கொண்டுள்ளார்.  தேசியத்துக்கும் தேசத்தின் பெருமைக்கும் எதிராக உள்ளவர்களுக்கு இது ஒரு நல்ல பதிலடி ஆகும்” எனக் கூறி உள்ளார்.