வரலாறு முக்கியம் அமைச்சரே..

ஜெயலலிதா - ராஜீ்வ்காந்தி (கோப்புபடம்)
ஜெயலலிதா – ராஜீ்வ் காந்தி (கோப்பு படம்)

முதல்வர் பதவி ஏற்ற ஜெயலலிதாவுக்கு, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இதில் என்ன அதிசயம் ? அவர் தனது செந்தத்திற்கு – சின்ன அம்மாவிற்கு வாழ்த்து கூறியுள்ளார். ஆச்சரியமா ? இதோ விவரமான பதிவுகள்…
இந்த நேரத்தில், 1989ம் ஆண்டு (மார்ச் 31ம் தேதியிட்ட )  ‘தராசு’ வார இதழில் வெளியான செய்தி ஒன்று நினைவுக்கு வந்தது.
“ராஜீவ் காந்திக்கு முறைப் பெண் ஜெயலலிதா!” ஒரு “களுக்” ரிப்போர்ட்! –  என்ற தலைப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய அந்தக் செய்தி கட்டுரையை  எழுதியவர் மூத்த பத்திரிகையாளர் எம்.பி. திருஞானம். ‘தராசு’ வார இதழ் ஆசிரியர் ஷ்யாம், மிகுந்த யோசனைக்குப் பிறகே, இந்தக்கு கட்டுரையை வெளிட்டர் என்ற திருஞானம் செல்கிறாரார்.
இந்தக்கு கட்டுரையை அடிப்படையாக வைத்து, கூடுதல் விவரங்களுடன் பிறகு, “இல்லஸ்டட் வீக்லி” – The Illustrated weekly of India ஆங்கில இதழ் வீரிவனா செய்திக் கட்டுரையை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
இதோ ‘தராசு’ இதழ் கட்டுரை …
“தமிழகத்தைச் சேர்ந்த கோபாலசாமி அய்யங்கார், 1947 – 52 காலகட்டத்தில் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் அமைச்சரவையில் ரயில்வே அமைச்சராக இருந்தார்.  இவர், நேருவின் நெருக்கமான நண்பர்களில் ஒருவர். இவரது மகன்தான், அயலுறவுத் துறையில் பிரதமர் இந்திரா காந்திக்கும் பின்னர் ராஜீவ் காந்திக்கும் மூல பலமாய் இருந்த ஜி.பார்த்தசாரதி.
திருமதி. இந்தரா காந்தியும் ஜி.பார்த்தசாரதியும் லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைகழக்த்தில் ஒன்றாக படித்தவர்கள். நெருக்கமான நண்பர்கள்.
ஜி.பார்த்தசாரதி, சோவியத் தாக்கத்துக்கு ஆளானவர். ஆக்ஸ்போர்டிலேயே சக மாணவர்களைச் சேர்த்துக்கொண்டு மார்க்ஸ் – எங்கல்ஸ் தத்துவங்களை பிரச்சாரம் செய்திருக்கிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு கிளையின் அமைப்புத் தலைவர்கள் ஆறுபேர். அந்த ஆறுபேரில் ஒருவர் ஜி பார்த்தசாரதி.
இந்திரா காந்தியை கல்லூரி நாட்களிலேயே காதலித்து (1942) பின்னாளில் மகாத்மா காந்தியின் ஆசியுடன் (நேருக்கு விருப்பமில்லை) புரட்சித் திருமணம் செய்துகொண்ட பெரோஸ் காந்தியும், ஜி.பார்த்தசாரதியும் நல்ல தோழர்கள்.
பெரோஸ்காந்தி
பெரோஸ்காந்தி

பெரோஸ் காந்தி பார்ஸி இனத்தைச் சேர்ந்தவர். ஜி.பார்த்தசாரதிக்கு, பெரோஸ் காந்தியிடம் நெருங்கி உறவாடும் சந்தர்ப்பம், சென்னையில் உள்ள தி இந்து -The Hindu ஆங்கிலப் பத்திரிகை அலுவலகத்தில்தான் கிடைத்தது.
எப்படி என்றால், ஜவஹர்லால் நேரு காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளையும் இந்திய அரசின் கொள்கைகளையும் ஏந்தியவாறு ஒரு ஆங்கில தினசரியை டில்லியில் துவங்க வேண்டும் என நினைத்தார். அதுவும், மாப்பிள்ளை பெரோஸ் காந்தியின் நேரடி மேற்பார்வையில் நடத்தவேண்டும் எனவும் திட்டமிட்டார். உடனே அவருக்கு தி இந்து பத்திரிக்கை உரிமையாளர்கள் மாற்று ஜி.பார்த்தசாரதியும் நினைவுக்கு வந்தார்கள்.
ஜி.பார்த்தசாரதி தி இந்து பத்திரிகையின் சீனியர் சப்-எடிட்டர். ஜவஹர்லால் நேரு தன் விருப்பத்தை ஜி பார்த்தசாரதியிடம் கூறி, ஆங்கில நாளேட்டை எடிட் செய்யவும், நிர்வகிக்கவும் பெரோஸ் காந்திக்கு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்தார்.
பெரோஸ் காந்தி தி இந்து பத்திரிகை சென்னை அலுவலகத்தில் பார்த்தசாரதியின் நெருக்கத்துடன் சில காலம் பயிற்சி பெற்று, டில்லி திரும்பினார்.
இந்திராகாந்தி
இந்திராகாந்தி

நேருவின் நீண்டகால கனவான நேஷனல் ஹெரால்ட் – National Herald பத்திரிகை துவக்கப்பட்டு, அதன் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளராக பெரோஸ் காந்தி பொறுப்பேற்றார். முதல் இதழ் வெளியீட்டு விழாவில் ஜி பார்த்தசாரதியும் பங்கேற்றார்.  பெரோஸ் காந்தி குடும்பத்துடன் நெருக்கமான உறவு உருவானது.
பெரோஸ் காந்தி  சகோதரி இந்திரா, அதே குடும்பத்தில் இருந்தார். அந்த இந்திராவுக்கும் ஜி பார்த்தசாரதிக்கும் காதல் கிளைவிட்டது. தந்தை கோபால்சாமி அய்யங்காரின் கடும் எதிர்ப்பையும் மீறி, திருமணம் நடந்தது. கோபால்சாமி அய்யங்கார், பார்ஸி இனத்து பெண்ணை திருமணம் செய்துகொண்ட மகனை வீட்டுக்கு வரக்கூடாது என்று குடும்ப பிரஷ்டம் செய்தார்.
ஜி பார்த்தசாரதியை 1982ம் வருடம் நடந்த மதுரை மாவட்ட இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக்க ஒரு முயற்சி நடந்தது. அவருக்கும் உள்ளூர் தேர்தலில் போட்டியிட ஆசை இருந்தது.  அதே நேரத்தில் தமிழ்நாட்டில் உள்ள தி.மு.க. போன்ற கட்சிகள் கொச்சையாக விமர்சிப்பார்களே என்று தயக்கமும் இருந்தது.
இந்த ஜி பார்த்தசாரதியின் முறைப்பெண், ஜெயலலிதாவின் தாயார் சந்தியா ஆவார்.
அதாவது… பார்த்தசாரதியின் அப்பா கோபால்சாமி அய்யங்காரின்  அக்காள் மகள்தான் ஜெயலலிதாவின் தாயார் சந்தியா. ஆகவே, பார்த்தசாரதிக்கு ஜெயலலிதா மகள் முறை.
 
பெரோஸ்காந்தி - இந்திராகாந்தி
பெரோஸ்காந்தி – இந்திராகாந்தி

அதாவது,
பார்த்தசாரதி – ராஜிவ் காந்திக்கு மாமா முறை;  ஜெயலலிதா – பார்த்தசாரதிக்கு மகள் முறை
அதாவது,
மாமன் பார்த்தசாரதியின் மகள் – ஜெயலலிதா;
ஜெயலலிதா – ராஜீவுக்கு மாமன் மகள்.
அதாவது முறைப்பெண்.”
1989 இல் ‘தராசு’ வார இதழில் வெளியான செய்தி.
 
13282589_900114880132723_1711656462_o