மும்பை நீதிமன்ற உதவியை நாடிய ராஜீவ் கொலையாளி..
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 29 ஆண்டுகளாகச் சிறையில் இருந்து வருபவர், பேரறிவாளன்.
தனது விடுதலைக்கு அவர் பல்வேறு விதங்களில் முயற்சித்தார். இப்போது மும்பை உயர்நீதி மன்ற கதவைத் தட்டியுள்ளார்.
ஏன்?
பேரறிவாளனைப்போல், இந்தி நடிகர் சஞ்சய் தத்தும் ஆயுத சட்டத்தின் கீழ் தண்டனை விதிக்கப்பட்டு, முன் கூட்டியே விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
’’சஞ்சய் தத் எதன் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார்?’ என்ற விவரங்களை தனக்கு அளிக்குமாறு பேரறிவாளன் மும்பை உயர் நீதிமன்றத்தை ’அணுகியுள்ளார்.
‘’பேரறிவாளன் கைது செய்யப்பட்டுத் தண்டிக்கப்பட்ட அதே ஆயுத சட்டத்தின் கீழ் தான் சஞ்சய் தத்துக்கும் தண்டனை வழங்கப்பட்டது. மத்திய அரசின் அனுமதி இல்லாமல் மகாராஷ்டிர மாநில அரசு , சஞ்சய் தத்தை தானே விடுதலை செய்துள்ளது. அதுபோல் பேரறிவாளனையும் தமிழக அரசு ஏன் விடுதலை செய்யக்கூடாது?
இந்த நிலையில் தான் சஞ்சய் தத், விடுதலை செய்யப்பட்டது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தருமாறு பேரறிவாளன் மும்பை உயர்நீதிமன்றத்தை அணுகி உள்ளார்’’ என்கிறார், பேரறிவாளனின் வழக்கறிஞரான சிவகுமார்.
-பா.பாரதி.