அனுராக கருக்கின் வெள்ளம் மலையாளப் படத்தில் அறிமுகமானவர் ரஜிஷா விஜயன். முதல் படத்திலேயே அவருக்கு கேரள அரசின் சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது.
கர்ணன் படத்துக்காக தமிழுக்கு அழைத்து வரப்பட்டார் ரஜிஷா. கர்ணன் ரஜிஷாவின் முதல் தமிழ்ப் படம். அதனைத் தொடர்ந்து கார்த்தியின் சர்தார் படத்தில் ரஜிஷா விஜயன் ஒப்பந்தமானார்.
இந்நிலையில் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் ஞானவேல் இயக்கத்தில் ஒரு படம் தயாராகிறது. இந்த படத்தில் சூர்யா கௌரவ வேடத்தில் தோன்றுகிறார். இதில் அவர் வழக்கறிஞராக நடிப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தில் ரஜிஷா விஜயன் ஒப்பந்தமாகியுள்ளார். அவர் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.