சென்னை,

ஜினி பேச்சு குறித்து தமிழக அரசியல் கட்சியினர் பலவாறாக விமர்சித்து வரும் நிலையில், ரஜினியின் புதிய பட அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கடந்த 15ந்தேதி முதல் ஒரு வாரம் ரஜினி தனது ரசிகர்களுடன் கலந்துரயாடி படம் எடுத்துக்கொண்டார். அப்போது, காலம் வரும்போது போருக்கு தயாராவோம் என்றும், தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்றும் அதிரடி கருத்துக்களை கூறி சலசலப்பை உண்டாக்கினார்.

அவரது கருத்தை பலரும் விமர்சித்து வரும் நிலையில், தற்போது அவரது புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ரஜினியினி மருமகன் தனுஷ், ரஜினியின் புதிய படம் பெயர் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த படத்த தனுஷ் தயாரிப்பில் கபாலி இயக்குனர் ரஞ்சித் இயக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினியின் அரசியல் பேச்சு… பரபரப்பு …. அனைத்தும் எப்போதும்போல புதிய படத்திற்கான விளம்பர  ஒத்திகைதான் என்பதுபோல தற்போது இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.