ரஜினி கூறிய செய்தி ‘பொய்’! அம்பலப்படுத்தினார் அவுட்லுக் பத்திரிகையாளர்

Must read

சென்னை:

பெரியார் குறித்து பிரபல இதழான அவுட்லுக்கில் வெளியானதாக நடிகர் ரஜினிகாந்த்  சுட்டிக்காட்டிய தகவல் பொய் என்று அவுட்லுக் பத்திரிகையாளர் ஜி.சி சேகர் மறுப்பு தெரிவித்து உள்ளார்.

துக்ளக் விழாவில் பெரியார் குறித்தும், முரசொலி குறித்தும் ரஜினி பேசியது சர்ச்சையான நிலையில், ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். மேலும் இன்று அவரது வீடு முற்றுகையிடப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில், நேற்று தனது இல்லம் அமைந்துள்ள போயஸ் கார்டனில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், தான் துக்ளக் விழாவில் இல்லாததை சொல்லவில்லை, ஏற்கனவே நடந்ததை தான் கூறினேன் என்றவர், அதற்கு ஆதாரமாக 1971ல் நடந்த பேரணி குறித்து அவுட்லுக் பத்திரிகையில் வெளியான செய்தி என ஒரு ஜெராக்ஸ் காப்பியை  ஆதாரமாக சுட்டிக்காட்டினார்.  அத்துடன், பெரியார் குறித்து தாம் தெரிவித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது என்றும் கூறினார்.

இந்த நிலையில், ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் காட்டிய அவுட் ஆதாரம் உண்மையில்லை என்று, பத்திரிகை யாளர் ஜி.சி.சேகர் மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளார்.

ரஜினி கூறியதுபோன்று,   1971ம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற திக பேரணி குறித்து அவுட்லுக் பத்திரிகையில் எந்த செய்தியும் வெளியிடப்படவில்லை என அதில் பணியாற்றிய பத்திரிகையாளர்  ஜி.சி சேகர் தெரிவித்து உள்ளார்.

1971ல் நடந்த பேரணி 2017ம் ஆண்டு அப்போதைய துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமியிடம் எடுக்கப்பட்ட பேட்டியையே ரஜினிகாந்த் சுட்டிக்காட்டி உள்ளார் என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

More articles

Latest article