மும்பை:

ரசியல் கட்சி துவக்கப்போவதாக அறிவித்திருக்கும் நடிகர் ரஜினிகாந்த் பயன்படுத்தும் பாபா முத்திரைக்கு மும்பை நிறுவனம் ஒன்று உரிமை கோரியிருக்கிறது.

நடிகர் ரஜினிகாந்த், தான் அரசியல் கட்சி துவங்கி தமிழகத்தில் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் வேட்பாளரை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளார். இந்த நிலையில் அவர், பிரத்யேகமான முத்திரை ஒன்றை பயன்படுத்தி வருகிறார்.  இரு நடுவிரல்கள் மற்றும் கட்டை விரலை மடித்தும், ஆள்காட்டி விரல் மற்றும் சுண்டு விரலை உயர்த்தியும் காண்பிக்கும் அந்த முத்திரையை, ரஜினி தனது ‘பாபா’ படத்திலேயே பயன்படுத்தி இருந்தார்.

இந்த ‘பாபா’ முத்திரை அவரது ரசிகர் சந்திப்பு நிகழ்ச்சிகளில் மேடையில் பொறிக்கப்பட்டு இருந்தது. , அவரது ரசிகர்களும் அந்த முத்திரையுடன் கூடிய அட்டைகள், கொடி போன்றவற்றை தயாரித்து விளம்பரப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், குறிப்பிட்ட முத்திரை, தங்களது நிறுவனத்தின் லோகோ போல இருப்பதாக கூறி, ‘வாக்ஸ்வெப்’ எனப்படும் சமூக நெட்வொர்க் செயலியை வடிவமைத்துள்ள மும்பையை சேர்ந்த நிறுவனம் ஒன்று உரிமை கோரி இருக்கிறது. இது குறித்து  ரஜினிகாந்துக்கும் கடிதம் அனுப்ப்பபட்டு உள்ளதாக அதன் நிறுவனர் யாஷ் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்தின் பாபா திரைப்படம் 2002–ம் ஆண்டிலேயே வெளிவந்துள்ள நிலையில், இந்த நிறுவனம் சுமார் 18 மாதங்களுக்கு முன்புதான் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Baba-stamp-Claim–Mumbai-Company.