சென்னை: ரஜினிகாந்துக்காக பதிவு செய்யப்பட்ட ஆட்டோ ரிக்ஷா சின்னத்தை மக்கள் சேவை கட்சியானது தேர்தல் ஆணையத்திடம் திரும்ப ஒப்படைத்தது.

கட்சி ஆரம்பிப்பதாக ரசிகர்களிடமும், தமிழக மக்களிடமும் உறுதி அளித்திருந்த நடிகர் ரஜினிகாந்த அதன் முடிவில் இருந்து பின்வாங்கினார். உடல்நிலையை காரணம் காட்டி கட்சி ஆரம்பிக்க போவது இல்லை என்றும் அறிவித்து இருந்தார்.

இந் நிலையில் அவர் கட்சி ஆரம்பிக்கிறார் என்று பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், அவரது கட்சிக்காக ஆட்டோ ரிக்ஷா சின்னத்தை தேர்தல் ஆணையத்தில் மக்கள் சேவை கட்சி பதிவு செய்து வைத்திருந்தது.

ஆனால், யாரும் எதிர்பாராத தருணத்தில் கட்சியை தொடங்கும் எண்ணத்தை அவர் கைவிட அனைத்து எதிர்பார்ப்புகளும் பொய்யானது. இந் நிலையில், ரஜினிகாந்துக்காக பதிவு செய்யப்பட்ட மக்கள் சேவை கட்சி தமக்கு ஒதுக்கப்பட்ட ஆட்டோ ரிக்ஷா சின்னத்தை தலைமை தேர்தல் ஆணையத்திடம் திரும்ப ஒப்படைத்து இருக்கிறது.