மத்திய அரசின் வேளாண் சட்டத்துக்கு எதிராக ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று போராட்டம் நடைபெற்றது. இதில் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் “அடுத்த ஆண்டு நடைபெறும் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது” என தெரிவித்தார்.

“நாட்டின் பொருளாதாரம் வளர்வதற்கு பதிலாக ஒவ்வொரு நாளும் பிரதமர் மோடியின் தாடி மட்டுமே வளர்ந்து வருகிறது” என அவர் கேலி செய்தார்.

“முட்டாள்கள் தினமான ஏப்ரல் முதல் தேதி அன்று தான் ரஜினிகாந்த், தனது அரசியல் கட்சியை தொடங்குவார்” என்று குறிப்பிட்ட இளங்கோவன் “அரசியலில் நடிகர் சிவாஜி கணேசனுக்கு ஏற்பட்ட கதிதான் ரஜினிகாந்துக்கும் ஏற்படும்” என தெரிவித்தார்.

– பா. பாரதி