சென்னை:
வரும் 15-ம் தேதி முதல் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் அறிவிப்பை வெளியிட்டிருந்தார். கடந்த மாதம் 12ம் தேதி முதல் 17ம் தேதி வரை இந்த நிகழ்வு நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் தமிழகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் இருந்தனர். ஆனால், எதிர்பாராதவிதமாக இந்த சந்திப்பை தற்காலிகமாக ரத்து செய்து ரஜினி அறிவித்தார். இது தொடர்பான ஆடியோவையும் அவர் வெளியிட்டிருந்தார்.
அதில், ஒரு நாளைக்கு 2,000 பேர்களுடன் தனித்தனியாக நின்று போட்டோ எடுத்துக்கொள்வது சாத்தியமாகாது என்பதால், மாற்று ஏற்பாடுகளில் இறங்கியுள்ளதாக தெரிவித்தார். எனினும் அனைத்து ரசிகர்களுடனும் தனித்தனியாக போட்டோ
எடுத்துக்கொள்வதே தனது விருப்பம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் வரும் 15ம் தேதி முதல் ரசிகர்களை ரஜினிகாந்த் சந்திக்கிறார். ரசிகர்களுடன் தனித்தனியாக புகைப்படம் எடுத்துக் கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.