சென்னை:
காவேரி நியூஸ் மற்றம் நியூஸ் எக்ஸ் தொலைக்காட்சி ஆகியவை இணைந்து ‘ரஜினி அரசியல், மக்களின் குரல்’ என்ற தலைப்பில் கருத்துக்கணிப்பு நடத்தின. நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் அவருக்கு மக்களின் ஆதரவு எந்த அளவு இருக்கும் என்பது குறித்து இந்த கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டது.
ரஜினி அரசியலுக்க வந்தால் ஆதரவு அளிப்பீர்களா என்ற கேள்விக்கு ஆதரவு தருவோம் என்று 41 சதவிகிதம் பேரும், ஆதரவு அளிக்க மாட்டோம் என்று 59 சதவிகிதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
ரஜினிகாந்த் கூட்டணி அமைத்தால் ஆதரிப்போம் என்று 41 சதவிகிதம் பேரும், எதிர்ப்போம் என்று 59 சதவிகிதம் பேரும் கருத்து கூறியுள்ளனர்.
நடிகர்கள் அரசியலுக்கு வரலாமா என்ற கேள்விக்கு வரலாம் என்று 53 சதவிகிதம் பேரும், வரக்கூடாது என்று 47 சதவிகிதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
ரஜினி அரசியலுக்கு வரலாமா வேண்டாமா என்று பெண்களிடம் கேட்டபோது வரவேண்டும் என்று 47 சதவிகிதம் பேரும், வேண்டாம் என்று 53 சதவிகிதம் பேரும் கருத்து கூறியுள்ளனர்.
ரஜினிக்கு பெண்கள் ஆதரவு ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று 49 சதவிகித பெண்களும், வரவேண்டாம் என்று 51 சதவிகித பெண்களும் கருத்து கூறியுள்ளனர்.ரஜினிகாந்த் யாருடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளது என்ற கேள்விக்கு பாஜக 44% காங்கிரஸ் 4% திமுக 18% அதிமுக 7% டிடிவி தினகரன் 4% இடது சாரிகள் 0.7% தமாகா 2% மற்றவை 20% என கருத்து தெரிவித்துள்ளனர்.