சென்னை

டிகர் ரஜினிகாந்த் மகளிர் இருந்தால் வெற்றி நிச்சயம் இருக்கும் என கூறி உள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பயணத்தில் அடுத்தடுத்து நடவடிக்கை எடுத்து வருகிறார்.   சில தினங்களுக்கு முன்பு ரஜினிகாந்த்  தனது மக்கள் மன்ற இளைஞர் அணியினருடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.  அதன் பிறகு இன்று ரஜினி மக்கள் மன்ற மகளிர் அணி செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.  அதன் பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது ரஜினிகாந்த்,, “என்னுடைய ரஜினி மக்கள் மன்றத்துக்கு மகளிர் ஆதரவு அமோகமாக உள்ளது.  நான் தொடங்க உள்ள கட்சியில் மகளிருக்கு முன்னுரிமை வழங்கப்பட உள்ளது.  மகளிருக்கு முன்னுரிமை வழங்கும் நாடுகள் முன்னேறி உள்ளன.   மகளிர் இருக்கும் இடத்தில் வெற்றி நிச்சயம் இருக்கும்.

எப்போது தேர்த்ல் வந்தாலும் நாம் அதை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்.  கட்சியை நான் இன்னும் தொடங்காததால் கூட்டணி பற்றி எதுவும் சொல்ல இயலாது.  இன்னும் நான் கட்சி தொடங்கவில்லை என்பதால் நான் கமல் நடத்திய கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

உச்சநீதிமன்ற தலையீட்டால் கர்நாடக விவகாரத்தில் ஜனநாயகம் வெற்றி பெற்றுள்ளது.   ஆளுநர் எடியூரப்பாவுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசம் கொடுத்தது  கேலிக்கூத்து ஆகும்.    ஆளுநர் இது போல செய்தது  தவறானது.

காவிரி விவகாரத்தில் அணைகள் அதிகாரம் ஆணையத்திடம் இருக்க வேண்டும்.  கர்நாடகாவிடம் இருக்கக் கூடாது.   நீதிமன்ற தீர்ப்பை கர்நாடகாவை ஆள உள்ள காங்கிரஸும் மஜத வும் மதிக்க வேண்டும்.” என் கூறினார்.