ஆன்மீகத்தின் மீது அதிக ஈடுபாடு கொண்ட ரஜினிகாந்த் வாழும் கலை அமைப்பின் நிறுவனரும், ஆன்மீக குருவுமான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.

இந்த சந்திப்பின் போது ரஜினிகாந்தின் மகள்கள் ஐஸ்வர்யாவும், சவுந்தர்யாவும் உடன் இருந்தனர்.

நடிகர் ரஜினிகாந்த், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை சந்தித்தபோது எடுத்த புகைப்படத்தை ஐஸ்வர்யா தனுஷ், தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

அதே போல் நடிகர் வடிவேலுவும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை சந்தித்தபோது எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.