சென்னை
மக்களவை தேர்தலில் மீண்டும் பாஜக வெற்றி பெற்றதற்கு நடிகர் ரஜினிகாந்த் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் தமிழகம் மற்றும் கேரளாவில் பாஜக படு தோல்வி அடைந்தது. ஆயினும் வட மாநிலங்களில் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மை பெற்றது.
மீண்டும் ஆட்சி அமைக்க உள்ள பிரதமர் மோடிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது டிவிட்டரில், “மதிப்புக்குறிய நரேந்திர மோடி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். நீங்கள் சாதித்துள்ளீர்கள். . உங்களை இறைவன் ஆசிர்வதிக்கட்டும்” என பதிந்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel