சென்னை:
தூத்துக்குடி சென்று ஆறுதல் கூறச்சென்று, அனைத்து கட்சிகளின் எதிர்ப்பையும் சம்பாதித்துள்ள நடிகர் ரஜினி காந்தை இன்று தென் சென்னை மாவட்ட காங்., தலைவர் கராத்தே தியாகராஜன் போயஸ் கார்டனில் உள்ள வீட்டுக்கு சென்று சந்தித்தார். அப்போது அரசியல் நிலவரம் குறித்து இருவரும் பேசியதாக கூறப்படுகிறது.
சுமார் ஒருமணிநேரம் இந்த சந்திப்பு நடந்தது.
ரஜினியுடனான சந்திப்பை முடித்துவிட்டு வெளியே வந்த கராத்தே தியாகராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ரஜினி நீண்ட நாள் நண்பர் என்ற முறையில் அவரை சந்தித்து பேசியதாக கராத்தே தியாகராஜன் கூறினார்.
தூத்துக்குடி விவகாரத்தில் காவலர்களின் செயலை ரஜினிகாந்த் ஆதரிக்கவில்லை என்றும், ரஜினிகாந்த் சமூக விரோதிகள் என்று கூறியது. சென்னையில் ஐபிஎல் போட்டியின்போது காவலர் தாக்கப்பட்டதையே, அதைத்தான் ரஜினிகாந்த் கண்டித்தார் என்றும் கூறினார்.
மேலும், ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து விமர்சிக்கும் இயக்குநர் பாரதிராஜா, ஏன் ரஜினியை வைத்து அவரது திரைப்பட பயிற்சி மையத்தை திறந்து வைத்தார் என்று கேள்வி எழுப்பினார்.
தமிழகத்தில் நடைபெற்று வரும் அனைத்து நிகழ்வுகளையும் ரஜினிகாந்த் கவனித்து வருவதாகவும் கராத்தே தியாகராஜன் ரஜினிகாந்துக்கு வக்காலத்து வாங்கியே பேசினார்.