சென்னை
பிரபல நடிகர் மீசை ராஜேந்திரன் உறுப்பு தானம் செய்ததற்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரபல நடிகரும், தே.மு.தி.க. பிரமுகருமான மீசை ராஜேந்திரன் தமிழக அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளார்.
மீசை ராஜேந்திரம் தனது பிறந்த நாளையொட்டி, உடல் உறுப்பு தானம் செய்துள்ளார்,
இதற்கு தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அவரை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.
உடல் உறுப்பு தானம் செய்த நடிகர் மீசை ராஜேந்திரனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.