புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக தனி விமானம் மூலம் பெங்களூர் சென்றார் ரஜினிகாந்த்.

கர்நாடக திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வந்தவர் புனித் ராஜ்குமார்.

கடந்த ஆண்டு அக்டோபர் 29 ம் தேதி மாரடைப்பால் காலமானார்.

46 வயதான இளம் நடிகரின் மரணம் நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியது.

இந்த நிலையில் அவருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்தது.

மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டதை அடுத்து நவம்பர் 1 ம் தேதி கர்நாடக தினமாக கடைபிடிக்கப்படுவதுடன் அரசு விடுமுறையும் விடப்படுகிறது.

கர்நாடக தினமான இன்று புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சிக்கு 5000 பேர் மட்டுமே அனுமதிக்கபட இருக்கிறார்கள்.

கர்நாடக அரசு விருது வழங்கும் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொள்கிறார்.

இதற்காக தனி விமானம் மூலம் இன்று அவர் பெங்களூரு சென்றார்.

[youtube-feed feed=1]