சென்னை, லீலா பேலஸ் ஹோட்டலில் மார்ச் 12 ரஜினிகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் . முதல்வர் பதவியே எனக்கு வேண்டாம், என் ரத்தத்திலேயே அந்த ஆசை இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் திட்டவட்டமாக கூறி விட்டார்.

நான் தொடங்கும் கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை இருப்பார். இதற்காக ஒரு குழுவை உருவாக்குவேன். வாக்குறுதிகளை செயல்படுத்த, ஒரு கண்காணிப்பு குழு உருவாக்குவேன். என்னால் முதல்வர் பதவியை நினைத்து பார்க்க முடியாது.நான் நல்லவரை முதல்வராக தேர்வு செய்வேன். 50 வயதுக்கு கீழ் இருக்கும் நபர்களை முதல்வராக்குவேன் என கூறியுள்ளார்

ரஜினியின் பேட்டியைப் பலரும் பலவிதமாக எடுத்துக்கொண்டு ஆளுக்கொரு கருத்து தெரிவித்து வந்த நிலையில், ரஜினி இன்று அனைவருக்கும் நன்றி தெரிவித்து ட்வீட் போட்டுள்ளார்.

அதில் ரசிகர்கள், ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

“அரசியல் மாற்றம்… ஆட்சி மாற்றம், இப்ப இல்லைன்னா எப்பவுமே இல்லை என்கிற கருத்தை பாமர மக்களும் பேசுகின்ற, சிந்திக்கின்ற வகையில் கொண்டு போய் சேர்த்த ஊடகங்களுக்கும், பத்திரிகைகளுக்கும், சமூக வலைதளங்களுக்கும், மன்ற உறுப்பினர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி”.