சென்னை:
அரசியலுக்கு வந்துவிட்டதாக அறிவித்த நடிகர் ரஜினிகாந்த், தனது அரசியல் ஆன்மிக அரசியல் என்றும், எம்.ஜி.ஆர். ஆட்சியை கொடுப்பேன் என்றும் பேசி வந்தார். விரைவில் கட்சி பெயரை அறிவிக்க திட்டமிட்டு இருப்பதாக கூறி உள்ள ரஜினி, மாவட்ட வாரியாக, பொறுப்பாளர்களை நியமித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 10ந்தேதி திடீரென இரண்டு வார சுற்றுப்பயணமாக இமயமலை புறப்பட்டு சென்றார். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களின் காவிரி மேலாண்மை வாரியம் குறித்த கேள்விக்கு பதில் அளிக்க மறுத்துவிட்ட சென்ற அவர், சென்னையில் இருந்து விமானம் மூலம் சிம்லா சென்ற ரஜினி, அங்கிருந்து தர்மசாலா, ரிஷிகேஷ் மற்றும் பாபா குகைக்கு செல்ல திட்டமிட்டுள்ளார்.
நேற்று முன்தினம் இமாச்சல் மாநிலம் கங்ரா விமான நிலையம் அடைந்த ரஜினி பின்னர் அங்கிருந்து, பைஜ்நாத் நகரம் அருகே பாலாம்பூர் என்ற சிறிய கிராமத்திற்கு ரஜினி சென்றார். இதன் அருகே உள்ள கண்ட்பாடி கிராம தியான மையத்திற்கு சென்று தியானம் மேற்கொண்ட ரஜினி அங்கிருந்து இமய மலை பயணம் மேற்கொண்டுள்ளார்.
இமயமலையில் ரஜினி தனது நண்பர்களுடன் இணைந்து கட்டியுள்ள தியான மண்டபத்திற்கும் செல்லும் ரஜினி, அங்கு 5 நாட்கள் தங்கி இருக்கவும், அதைத்தொடர்ந்து, தன் குரு பாபா மற்றும் ஆன்மிக குருக்களிடம் ஆசி பெற இருப்பதாக கூறப்படுகிறது.